< Back
மாநில செய்திகள்
அயோத்தி சாமியாரின் உருவப்படம் எரிப்பு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

அயோத்தி சாமியாரின் உருவப்படம் எரிப்பு

தினத்தந்தி
|
8 Sept 2023 3:15 AM IST

அயோத்தி சாமியாரின் உருவப்படம் எரிப்பு

வால்பாறை

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, அவரது தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக அறிவித்தார். இதை கண்டித்து வால்பாறையில் நகர தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சனாதனத்துக்கு எதிராகவும், இந்தியா என்ற பெயரை மாற்றுவதற்கும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பரமஹம்ச ஆச்சாரியாரின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்