< Back
மாநில செய்திகள்
அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: கே.எஸ்.அழகிரி பேட்டி
மாநில செய்திகள்

அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: கே.எஸ்.அழகிரி பேட்டி

தினத்தந்தி
|
23 Jan 2024 3:02 PM IST

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கே.எஸ்.அழகிரி கூறினார்

கும்பகோணம்,

கும்பகோணத்தில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. இந்துக்களை நாங்கள் தான் வளர்த்தோம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்துக்கள் தாங்களாகவே வளர்ந்தார்கள். அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்