< Back
மாநில செய்திகள்
அழகியநாச்சி அம்மன் கோவில் தேரோட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அழகியநாச்சி அம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
1 Aug 2023 10:49 PM IST

பொன்னமராவதி அருேக அழகியநாச்சி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அழகியநாச்சி அம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே அழகியநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது.

மேலும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்.

இதைதொடர்ந்து மேள, தாளம் முழங்க வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் ேதரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. அப்போது ஒவ்வொரு வீதிகளிலும் கூடியிருந்த பக்தர்கள் தேங்காய், பழம், பூ வைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்