< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
சைக்கிளில் விழிப்புணர்வு
|14 Aug 2022 11:29 PM IST
சைக்கிளில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
எஸ்.புதூர்,
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள வலச்சேரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெற்ற சுதந்திரத்தினை பேணி காப்போம் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். இந்த சைக்கிள் பயணம் மேலூர், கொட்டாம்பட்டி பகுதிகளில் முடிவடைந்ததை தொடர்ந்து எஸ்.புதூர் பகுதிகளான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, கே.புதுப்பட்டி, கிழவயல், எஸ்.புதூர், உலகம்பட்டி வழியாக புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வரை தொடர்ந்தார். பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக்கூறினார்.