< Back
மாநில செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
சிவகங்கை
மாநில செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
30 Jun 2022 10:54 PM IST

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் சார்பாக சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நாட்டு நல பணித் திட்ட அலுவலர் பீர்முகமது போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் போதை பொருள்களால் இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, அப்ரோஸ் மற்றும் சேக் அப்துல்லா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்