< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு கண்காட்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

விழிப்புணர்வு கண்காட்சி

தினத்தந்தி
|
26 Jun 2022 10:59 PM IST

விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.

காரைக்குடி,

கோட்டையூர் பேரூராட்சி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், நடைமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு முறை பயன் படுத்தும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது குறித்த விழிப்புணர்வு மற்றும் மீண்டும் மஞ்சள் பை பயன் படுத்துவதை ஊக்குவித்தல் அதற்கான மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்த சுய உதவி குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பேரூராட்சி தலைவர் கார்த்திக் சோலை தலைமையில் செயல் அலுவலர் கவிதா முன்னிலையில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா திறந்து வைத்தார். இதில் மாணவ- மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்