ராமநாதபுரம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
|பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதுகுளத்தூர்.
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் இந்த நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னக்கண்ணு தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் பொது இடங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் குற்றங்கள் சம்பந்தமாக ஏற்படும் தொல்லைகள், படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளுக்கு படிப்பை மீண்டும் தொடர செய்வது உள்ளிட்டவை குறித்து போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் 100 181 1098,1930 என்ற எண்களை மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் ஷாஜகான், ஜமாத் தலைவர் முகம்மது இக்பால், பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மது சுல்தான் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.