< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
|10 Jun 2022 11:45 PM IST
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆலோசனையின் பேரில் அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வழிகாட்டுதலின் படி "பெண் குழந்தையை காப்போம்" பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்"எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முகமது, ஷேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.