திருவண்ணாமலை
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
|திருவண்ணாமலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திருவண்ணாமலையில் இன்று நடைபெற்றது.
ஊர்வலத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தொடங்கி போளூர் சாலை வழியாக பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்காவில் சென்றடைந்தது.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தியபடி சென்றனர்.
தொடர்ந்து அறிவொளி பூங்காவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
இதில் உதவி பொறியாளர்கள் வ.கதிவேலன், க.பிரேம்குமார், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.