< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
டெங்கு-பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
|18 Oct 2023 11:12 PM IST
டெங்கு-பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வாங்கல் வட்டார சுகாதாரத் துறை மற்றும் புகழூர் நகராட்சி சார்பில் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் டெங்கு, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
முன்னதாக டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஓழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கரூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) செல்வமணி, டாக்டர்கள் சாந்தி, சங்கர்பாபு, புகழூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வள்ளி முத்து, மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.