புதுக்கோட்டை
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
|மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அன்னவாசல் வட்டார வள மையம் சார்பில், அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிறப்பிலிருந்து 18 வயது வரை உடைய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாைள (வியாழக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்த மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. வட்டார கல்வி அலுவலர்கள் அலெக்சாண்டர், கலாசெலின் ஆகியோர் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலம் அரசு மருத்துவமனை, கடைவீதி, பஸ் நிலையம் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. இதில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தியவாறு மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பவுல்ராஜ், சிறப்பு பயிற்றுனர்கள் பாஸ்கரசேதுபதி, கலைச்செல்வி, ரூபாசந்திரா மற்றும் இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.