< Back
மாநில செய்திகள்
சிறுதானிய உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

சிறுதானிய உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
12 Sep 2023 5:24 PM GMT

ஆரணியில் சிறுதானிய உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஆரணி

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட சிறுதானிய உணவு பொருட்களின் மூலம் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் விளக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தலைமை ஆசிரியை வசந்தா தலைமை தாங்கினார். மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி வரவேற்றார்.

ஊர்வலம் ஆரணி கோட்டை மைதானம் நான்கு புறமும் சுற்றி மீண்டும் பள்ளியை வந்து நிறைடைந்தது. இதில் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முன்னிலையில் பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் சிறுதானிய உணவு பொருட்கள் உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார்.

Related Tags :
மேலும் செய்திகள்