< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு பயிற்சி

தினத்தந்தி
|
17 March 2023 6:56 PM GMT

மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தாந்தோணி வட்டார வள மையம் சார்பில் 1 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு ஆலோசனை மற்றும் கருத்துக்கள் குறித்து பேசினார். மாற்றுத்திறன் குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல், அவர்களுக்கு தேவையான பயிற்சிகள், உபகரணங்கள், மருத்துவ உதவிகள், ஆலோசனைகள், பிசியோதெரபி, அறிவுசார் பயிற்சி போன்றவற்றை வழங்குவது பற்றி எடுத்து கூறப்பட்டது. மேலும் அனைத்து மாற்று திறன் குழந்தைகளும் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பயிற்சி வழங்கிடவும், ஒன்றிய அளவில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையம் காந்திகிராமம் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தனி வகுப்பறையில் பயிற்சி வழங்கப்படுகிறது அதனை அனைத்து பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கரூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கான பயிற்சி முகாம் பெரிய குளத்துபாளையத்தில் நடைபெற்றது. இதில், கிராம செவிலியர், சிறப்பு ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கருத்தாளர்களாக இருந்து பயிற்சி அளித்தனர்.

மேலும் செய்திகள்