< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி

தினத்தந்தி
|
12 Dec 2022 6:45 PM GMT

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவி களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவி களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி படிப்பு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல் கூட்டம் சிவகங்கையில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது:-

அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி படிப்பு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உயர் கல்வி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதில் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் கலந்து கொள்வது கல்லூரி விண்ணப்பங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்படும். வரும் கல்வி ஆண்டில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களது மூன்று முன்னுரிமை விருப்ப பாடத்தை நான் முதல்வன் இணைய பக்கத்தில் பதிவிடுவதை தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டிக்கு என பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி, உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்