< Back
மாநில செய்திகள்
பெண்கள் உரிமை, பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பெண்கள் உரிமை, பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

தினத்தந்தி
|
5 March 2023 12:15 AM IST

மயிலாடுதுறையில் பெண்கள் உரிமை, பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கூடுதல் மாவட்ட நீதிபதி இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை உரிமை நீதிபதி ராஜேஷ் கண்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் குழு தலைவருமான கவிதா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இதில் பெண்களுக்கான உரிமை மற்றும் சட்ட பாதுகாப்புகள் குறித்து விளக்கி எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் குழு ஆலோசகர்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்