திருவண்ணாமலை
பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
|திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை கல்லூரியில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு 'உனக்கு நீயே ஒளி' என்ற தலைப்பில் பெண்கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி துணைத்தலைவர் எ.வ.குமரன் தலைமை தாங்கினார். கல்லூரி பதிவாளர் இர.சத்தியசீலன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுகவுரையை தமிழ்த்துறை தலைவர் வே.சுலோச்சனா வாசித்தார்.
பட்டிமன்ற பேச்சாளர் ஜோதி கலந்து கொண்டு 2022-2023-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் "உனக்கு நீயே ஒளி" என்னும் தலைப்பில் மாணவிகளுக்கு ஒழுக்கம், உண்மை, நேர்மை, உழைப்பு குறித்தும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
விழாவில் அனைத்து துறை தலைவர்களும், பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முடிவில் ஆங்கிலத்துறை தலைவர் ஏ.மகாலட்சுமி நன்றி கூறினார்.