வேலூர்
எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு
|குருவராஜபாளையம் அரசு பள்ளியில் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் குருவராஜபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் பி.சி.ஆர்.ஏ. சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். ஆசிரியர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜெயராஜ் வரவேற்றார்.
கணித எரிபொருள் சிக்கன சங்கத்தின் கவுரவ விரிவுரையாளர் ப.கி.தனஞ்செயன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், நாளுக்கு நாள் எரிபொருள் தேவை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மின்சாரம், நீர் இதர எண்ணெய் வளங்களை பாதுகாப்பது சிக்கனமாக பயன்படுத்துவது நாம் அனைவரின் கடமையாகும் என்றார்.
மேலும் மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தி 3 மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராணிப்பேட்டை ஆசிரியர் பயிற்சி முதல்வர் மணி மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.