திண்டுக்கல்
இளம் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு
|வத்தலக்குண்டு கே.பி.நேஷனல் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
வத்தலக்குண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் மற்றும் வணிக கனிணி பயன்பாட்டியல் துறை சார்பில் இளம் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் பஜதுல் ரகுமான், கல்லூரி இயக்குனர் விஜயன் ஆகியோர் தலைமை தாங்கினர். 3-ம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர் சிவசுப்ரமணியன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுப்பையா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு தொழில்முனைவோர் துறை திண்டுக்கல் சரக ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா பங்கேற்று, இளம் தொழில் முனைவோர்களுக்கான கடனுதவி, சலுகைகள், தொழில் தொடங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். பின்னர் அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத்தலைவர்கள் சுரேஷ்குமார், சிவா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மேலாண்மைத்துறை பேராசிரியர் முஹம்மது ஹாசிம் நன்றி கூறினார்.