ராமநாதபுரம்
பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு
|பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
தொண்டி
தொண்டி, திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மக்கள் முனைப்பு இயக்கத்தின் கீழ் வளர் இளம் பெண்களுக்கான தன்னுரிமை மேம்பாட்டு திட்டம் கிஷோரி திவாஸ் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயகலா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் ஜமுனா ராணி, திருவாசகமணி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வளர் இளம் பெண்களுக்கு ரத்த சோகையை தடுத்தல், சரிவிகித உணவு முறையை கடைப்பிடித்தல், அயோடின் குறைபாடு நீக்குதல், வயதுக்கு ஏற்ற எடை, சத்தான உணவு வகைகள், மாதவிடாய் காலங்களில் வளரிளம் பெண்கள் சுத்தம், தன் சுத்தம், குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனையொட்டி அமைக்கப்பட்டு இருந்த சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானிய வகைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர். மாணவிகளுக்கு கொழுக்கட்டை, பாயாசம், கேழ்வரகு ரொட்டி போன்றவை வழங்கப்பட்டது. இதில் தொண்டி அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் காஞ்சனா மகாலிங்கம், குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் சந்திரா, மாலா, அங்கன்வாடி பணியாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.