< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

தினத்தந்தி
|
1 March 2023 3:50 PM IST

வந்தவாசியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

வந்தவாசி

வந்தவாசியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழிப்புணர்வு கருத்தரங்கு தலைமையாசிரியர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் முருகவேல் வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவர் வங்கை அகிலன் பக்தி பாடலைபாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர்கள் தமிழ்செஞ்சன், காளி ஆகியோர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கி பேசினர்.இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்