< Back
மாநில செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தினத்தந்தி
|
18 Feb 2023 2:12 AM IST

வள்ளியூர் மரியா பெண்கள் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

வள்ளியூர்:

வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவன தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் வரவேற்றார். கல்லூரி நூலகர் சாரதாதேவி போதைப்பொருட்கள் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். ஆங்கில பேராசிரியை ரெஜினா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்