< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

தினத்தந்தி
|
3 Oct 2022 3:15 AM IST

கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது

சேரன்மாதேவி:

கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போதை பொருட்கள் பயன்டுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் குமாரி வரவேற்றார். போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதில் இளைஞர்கள் பங்களிப்பு குறித்து கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் கருத்துரை ஆற்றினார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளர் முருகன், தன்னார்வ தொண்டர் மலர்கொடி, சுமிதா ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் துர்கா கவுரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்