< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
|21 May 2022 4:45 AM IST
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது
வள்ளியூர்:
சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம், தெற்கு கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுப்புற இடங்களை தூய்மையாக பராமரிப்பது குறித்து சுகாதார ஆய்வாளர் சித்ரா விளக்கி கூறினார். தொடர்ந்து அனைவரும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.