< Back
மாநில செய்திகள்
காட்டுப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

காட்டுப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
13 Jun 2022 2:01 PM GMT

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்க உள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்க பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணியின்போது பள்ளியில் உள்ள வசதிகள், மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் முறைகள் குறித்து பொது மக்களிடம் எடுத்து கூறி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளி செயல்படுவதாக தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரே 125 வருடம் பழமையான அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்நிலையில் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி ஊத்துக்கோட்டையில் அந்த பள்ளியின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் கதிரவன் தலைமை தாங்கினார். அரிமா சங்க தலைவர் துளசிராம், பொருளாளர் நடராஜன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் அபிராமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல்பரித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர்.

மேலும் செய்திகள்