விருதுநகர்
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
|ராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.சாலை விதிகளை மதிக்க வேண்டும், தலைக்கவசம் அணிய வேண்டும், அதிவேக பயணம் கூடாது, சீட் பெல்ட் அணிய வேண்டும், செல்போன் பேசியபடி வாகனம் இயக்க கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது, பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி தென்காசி சாலையில் தொடங்கிய பேரணி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக வந்து ஜவஹர் மைதானம் அருகே உள்ள அம்மா உணவகம் எதிரே நிறைவு பெற்றது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.