நீலகிரி
ஊட்டியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
|ஊட்டியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நீலகிரி மாவட்ட வருவாய் துறை, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ரெயில் நிலையம் பகுதியில், பேரணியை ஊட்டி ஆர்.டி.ஓ. மகாராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள், வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறை வீரர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். பேரணி லோயர் பஜார் சாலை, மணிகூண்டு, கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையம் அருகே முடிந்தது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி, தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் அரிராமகிருஷ்ணன், ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன், தாசில்தார் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.