காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
|பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டம் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்ட குறும்படத்தை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .வெங்கடேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக பொறியாளர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.