காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சுமார் 200 போலீசார் மோட்டார் சைக்கிளில் பேரணியாக காந்திரோடு தேரடியிலிருந்து புறப்பட்டு மூங்கில்மண்டபம், காமராஜர் சாலை, பேருந்துநிலையம், ரெட்டை மண்டபம், நான்கு ராஜவீதி சுற்றி மீண்டும் பேருந்துநிலையம், காமராஜர் சாலை, மூங்கில்மண்டபம், காந்திரோடு தேரடியில் நிறைவுப்பெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி.க்கள் சிவனுபாண்டியன், சார்லஸ் சாம் ராஜதுரை, பாலகுமார் மற்றும் டி.எஸ்.பி.க்கள் ஜீலியஸ் சீசர், வெங்கடகிருஷ்ணன், வெங்கடேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் விநாயகம், பேசில் பிரேம் ஆனந்த், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.