< Back
மாநில செய்திகள்
திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்
மாநில செய்திகள்

திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
14 Oct 2023 12:05 AM IST

திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூரில் சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜாம்பாள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அன்பழகி, பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகர் முருகன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ரூபாலிபானர்ஜிசிங் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி கடைவீதி வழியாக சென்றது. அப்போது பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், பெண் குழந்தை கல்வி, பாலியல் சீண்டல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து தனியார் மண்டபத்தில் குழந்தைகள் வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தாசில்தார் ராஜ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் புனிதவள்ளி, கலைச்செல்வி, வட்டார வள மேற்பார்வையாளர் காசிநாதன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் பிரேமலதா, கிருஷ்ணகுமாரி, வாசுகி உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள் பலா் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்