< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
|28 Sept 2023 3:54 AM IST
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை, செப்.28-
அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த பேரணி சென்றது. மேலும் ஒவ்வொரு கடையாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் நகர் மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் கோகுல், சங்கரநாராயணன், சுகாதாரத்துறை அதிகாரிகள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.