< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
|10 March 2023 12:26 AM IST
போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் பொது மக்கள் மற்றும் இளைஞர் நலனை கருத்தில் கொண்டு மது அருந்துதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக மாணவ-மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக டவுன் ஹாலை வந்தடைந்தது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.