< Back
மாநில செய்திகள்
போதை பழக்கத்தை எதிர்த்து விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

போதை பழக்கத்தை எதிர்த்து விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
26 Aug 2022 12:21 PM GMT

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் போதை பழக்கத்தை எதிர்த்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போதை பழக்கத்தை எதிர்த்து மனநல மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை கல்லூரி டீன் திருமால் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் போதை பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'சிகப்பு' வண்ணத்தில் கொடி, ரிப்பன், தொப்பி, பலூன் பயன்படுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

இதில் துணை மருத்துவ கண்காணிப்பாளர்கள் ஸ்ரீதரன், பாலசுப்ரமணியம், நிலைய மருத்துவ அலுவலர் அரவிந்தன், மருத்துவ காப்பீட்டு திட்ட நோடல் அதிகாரி கார்த்தீசன், குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் பெருமாள் பிள்ளை,

சமூக மருத்துவ துறை இணை பேராசிரியர் லட்சுமி, மனநலத்துறை இணை பேராசிரியர் சிவலிங்கம், உதவி பேராசிரியர்கள், ரோட்டரி சங்கம் - லைட் சிட்டியை சேர்ந்த டாக்டர் சுப்புலட்சுமி, கவிதா, மருத்துவ, செவிலியர், பாராமெடிக்கல் மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்