< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
விழிப்புணர்வு பேரணி
|27 Jun 2023 12:30 AM IST
சங்கரன்கோவிலில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோ கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி சார்பில் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கருப்பசாமி தொடங்கி வைத்தார். பேரணி சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே தொடங்கி முக்கிய ரதவீதிகள் வழியாக சென்றது.
இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கணபதி, பேராசிரியை குமாரி செல்வி, கணிப்பொறி அறிவியல் துறைத் தலைவர் குருநாதன், உடற்கல்வி இயக்குனர் ஈஸ்வரன், கணிதத்துறை பேராசிரியர் சிவக்குமார், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.