< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
25 April 2023 12:30 AM IST

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வலசக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் தனலட்சுமி, ஆசிரியர் செல்வம் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஊர்வலத்தில் ஆசிரியர் பயிற்றுனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நடப்பாண்டு கல்வி திட்டத்தில புதிய மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.

மேலும் செய்திகள்