< Back
மாநில செய்திகள்
சமரச தீர்வு மைய விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சமரச தீர்வு மைய விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
12 April 2023 2:23 AM IST

சேரன்மாதேவியில்‌ சமரச தீர்வு மைய‌ விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நீதிமன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு நீதிபதி ராஜலிங்கம் தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். சேரன்மாதேவி வக்கீல் சங்கத்தலைவர் செல்வகுமார், செயலாளர் சந்தனகுமார், அரசு வக்கீல் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல் சுசீந்திரன் சமரச தீர்வு மையத்தின் நோக்கம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். பேரணியில் சேரன்மாதேவி பாலாஜி நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

மேலும் செய்திகள்