< Back
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
7 April 2023 12:30 AM IST

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் மாணவர்கள் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி குத்தாலம், மேலத்தெரு, நடுத்தெரு, கீழத்தெரு, கழுங்கடித்தெரு ஆகிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதை பள்ளி தலைமை ஆசிரியர் செல்லம்மாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்