< Back
மாநில செய்திகள்
டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
17 Feb 2023 2:34 AM IST

சேரன்மாதேவியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம், சேரன்மாதேவி அரசு மருத்துவமனை, பத்தமடை மேம்படுத்தப்பட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், நிலவேம்பு குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங், பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரவண பிரகாஷ், சேரன்மாதேவி அரசு மருத்துவமனை மருத்துவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேரன்மாதேவி பேரூராட்சி மன்ற தலைவர் தேவி அய்யப்பன் பேரணியை விளக்கி பேசினார். சுகாதார ஆய்வாளர் முருகன், பூங்கொடி, கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் பேசினார்கள். இந்த பேரணி சேரன்மாதேவி பஸ் நிலையம் முதல் பேரூராட்சி மன்ற அலுவலகம் வரை நடைபெற்றது. முடிவில், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்