< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களை    பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
16 Nov 2022 6:45 PM GMT

மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வளவனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி குமாரகுப்பம் வழியாக சென்று பள்ளியில் முடிவடைந்தது. இப்பேரணியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்திரசேகர், வார்டு கவுன்சிலர் வடிவேலு, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜன், துணைத்தலைவர் நாராயணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி இலக்கியா, ஆசிரியர் பயிற்றுனர்கள் திருநாவுக்கரசு, வெண்ணிலா, இல்லம் தேடி கல்வித்திட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நாராயணன், சிறப்பு ஆசிரியர் கெஜலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காணை

இதேபோல் காணை ஒன்றியம் பனமலைப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணபதி, காணை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் கோபாலகிருஷ்ணன், கெஜலட்சுமி, அனிதா, எழிலரசி, சிறப்பு பயிற்றுனர் லியோனி, இயன்முறை மருத்துவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணி, பனமலைப்பேட்டை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது.

மேலும் செய்திகள்