< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
என் குப்பை என் பொறுப்பு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
|29 Nov 2022 7:24 PM IST
திருவள்ளூர் நகராட்சியை தூய்மை நகராட்சியாக மாற்றும் பொருட்டு என் குப்பை, என் பொறுப்பு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் சுதர்சன், வெயில்முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது திருவள்ளூர் நகராட்சியை குப்பைகள் இல்லாத தூய்மை நகராட்சியாக மாற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் என் குப்பை என் பொறுப்பு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.