< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
12 Oct 2023 12:15 AM IST

மணல்மேடு அருகே போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மணல்மேடு:

மணல்மேடு அருகே கடலங்குடி கடைவீதியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளிடம், போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதால் எவ்வாறு உயிர்கள் பாதுகாக்கப்படும் , செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபரீதம் உள்ளிட்டவைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் போலீசார், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்