< Back
மாநில செய்திகள்
சமூக நீதி, மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சமூக நீதி, மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
13 July 2022 6:01 PM GMT

சமூக நீதி, மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி மேற்பார்வையில் பெரம்பலூர் அரசு தொழில்பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் பேசும்போது, சமூகத்தில் உள்ள அனைவரிடம் சகோதர, சகோதரிகள் உணர்வோடு பேசிப்பழக வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வி தகுதியினை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அரசு பணிக்கு அறிக்கை வெளியாகும் தருணத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெற்றால் அதனை உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஐ.டி.ஐ. முதல்வர், விரிவுரையாளர்கள் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்