< Back
மாநில செய்திகள்
செஞ்சியில்  காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
விழுப்புரம்
மாநில செய்திகள்

செஞ்சியில் காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
19 May 2022 4:55 PM GMT

செஞ்சியில் காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

செஞ்சி,

தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய புகார்களை கைபேசி மூலம் உடனுக்குடன் காவல் துறைக்குத் தெரிவிக்க ஏதுவாக காவல் உதவி செயலி என்ற ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செஞ்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து காவல் உதவி செயலியை பயன்படுத்துவது குறித்த ஸ்டிக்கரை அரசு பஸ்களில் ஒட்டினார். அதைத்தொடர்ந்து காவல் உதவி செயலி குறித்து பொதுமக்களிடையே போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி, செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், இன்ஸ்பெக்டர்கள் தங்கம், அப்பாண்டை ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, சுப்பிரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர், முன்னதாக செஞ்சியை அடுத்தசிட்டாம் பூண்டியில் அரசு கலைக்கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்