< Back
மாநில செய்திகள்
மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
11 Oct 2023 11:23 PM IST

மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தோகைமலை பஸ் நிலையத்தில் நேற்று மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை அல்லது அதற்கான ஆலோசனை மற்றும் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்புவதற்கான சமூகப்பணிகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், சென்னை வித்தியாசாகர் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்