கரூர்
தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
|தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தோகைமலை ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஊராட்சி மன்றத்தலைவர் தனமாலினி கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் உமாசங்கர், மாவட்ட ஊராட்சி செயலாளர் குருவம்மாள், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட திட்ட இயக்குனர் வாணீஸ்வரி, தோகைமலை ஒன்றியக் குழு தலைவர் சுகந்தி சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் 3-ம் கட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினர். பின்னர் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மேலும், அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மை பணிகள் குறித்து கட்டுரை, ஓவியப் போட்டிகள், கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தோகைமலை ஒன்றிய ஆனையர்கள் ராஜேந்திரன், பாலசுந்தர், ஒன்றிய கவுன்சிலர் அம்பாள் குமார், ஊராட்சி துணைத்தலைவர் சக்திவேல், பொதுமக்கள், ஆசிரியர்கள், மற்றும்பலர் கலந்து கொண்டனர்.