< Back
மாநில செய்திகள்
தூய்மை நகரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேலூர்
மாநில செய்திகள்

தூய்மை நகரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
14 July 2022 4:52 PM GMT

தூய்மை நகரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது.

வேலூர் மாநகராட்சி சார்பில் ஊரீசு மேல்நிலைப்பள்ளியில் 'எனது தூய்மை நகரம்' குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் எபினேசர் தலைமை தாங்கினார். உதவி தலைமைஆசிரியை வித்யா பத்மினி, சுகாதார மேற்பார்வையாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் சாமிபிள்ளை ஜான்சன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி 44-வது வார்டு உறுப்பினர் தவமணி கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், மாணவர்களின் வீட்டில் சேகரமாகும் மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது பற்றி செய்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தொடர்ந்து 'எனது தூய்மை நகரம்' என்ற தலைப்பில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நடந்தது. இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்