< Back
மாநில செய்திகள்
தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
8 Oct 2023 12:40 AM IST

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் தொழிலாளர்கள் உரிமம் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் பணிபுரியும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மதுரை சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் சகாயராஜ் கலந்துகொண்டு மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் அவர்களின் உரிமை மற்றும் சட்டங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். அதனைத்தொடர்ந்து மனித கழிவுகள் அகற்றும் பணியில் பணியாளர்கள் இறந்தால் அவர்களுக்கான இழப்பீட்டு தொகை, காப்பீட்டு தொகை பெறுவது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும் வழக்குகளில் சட்ட உதவிகள் பெறுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்