விருதுநகர்
பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
|பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் இளம் வயது பெண்களுக்கான உடல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுமத்தின் இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செந்தில் குமார் தொடக்க உரையாற்றினார். கல்லூரியின் டீன் மாரிச்சாமி வாழ்த்துரை பேசினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மாரிச்சாமி கலந்து கொண்டு பேசியதாவது, இளம் வயதில் பெண்கள் ஆரோக்கியமான சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும். 18 வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்ய கூடாது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சுகாதாரதுறை ஆலோசகர் உதயசங்கரி, சமூக நலத்துறை மகாலட்சுமி, விருதுநகர் வட்டார சுகாதார புள்ளியளாலர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், பெண்கள் மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் வளர்மதி, ராமதிலகம், அருணா, ராஜேஸ்வரி, செல்வராணி மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.