< Back
மாநில செய்திகள்
மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
23 Jun 2023 12:15 AM IST

மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மானாமதுரை

மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட வளமீட்பு பூங்காவில் துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம் ஏற்பாட்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை, இயற்கை விவசாயம், மக்கும் குப்பைகள் தரம் பிரித்தல், உரமாக்குதல், மாடி தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் ஹரினி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்