< Back
மாநில செய்திகள்
கம்பத்தில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம்
தேனி
மாநில செய்திகள்

கம்பத்தில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
21 Oct 2022 4:34 PM GMT

கம்பம் நாகமணியம்மாள் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கம்பம் தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் செயல்விளக்கம், கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதற்கு பள்ளி செயலாளர் காந்தவாசன் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் சுகன்யா காந்தவாசன் முன்னிலை வகித்தார். முதல்வர் புவனேஷ்வரி வரவேற்றார். இதில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணக்குமார் கலந்துகொண்டு, விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாவது குறித்தும், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். பின்னர் கம்பம் தீயணைப்பு படைவீரர்கள், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அப்போது மாணவ-மாணவிகள், தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி மற்றும் தீயணைப்பு படைவீரர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்