< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்லில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
25 Jun 2022 3:38 PM GMT

திண்டுக்கல்லில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இன்று நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஆணையாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை இனிமேல் பயன்படுத்த மாட்டோம். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என்று கலெக்டர் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதையடுத்து 'எனது குப்பை எனது பொறுப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.

இதில் கலெக்டர் முதல் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை கலெக்டர், மேயர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

அதையடுத்து பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளாதா? என்று கலெக்டர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் இந்திரா, மகளிர் திட்ட உதவி அலுவலர் கங்காகவுரி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்